இணையத்தில் பணம் சம்பாதிக்கும் 3 வழிகள் (3 Ways of Making Money Online)

இணையம் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு ஊடகமாக இருக்கின்றது ஆனல் அதற்கு கடின உழைப்பும் பொறுமையும் தேவை. அதிகம் பேர் இணையத்தில் விரைவாக பணம் சம்பாதிக்க நினைத்து முட்டாளாகிய சந்தர்ப்பங்கள்தான் அதிகம். இலகுவாக யாரும்  பணம் சம்பாதிக்க முடியாது அதே நேரம் கடின உழைப்பு கைகொடுக்காமல் இருக்கவுமாட்டது. எனது முந்திய பிரசுரத்தில் (இணையத்தில் உழைக்க வழி செய்யும் விளம்பர இணையத்தளங்கள் (Few Advertisement Programs for Bloggers))இணையத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியை பற்றி மாத்திரம் பார்த்தோம் இந்த பிரசுரத்தில் ஏனைய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

1.Blogging: பணம் சம்பாதிக்க மிகவும் இலகுவான வழிகளில் முதன்மையானது Blogging. உங்களாலு இலவசமாக blog ஐ blogger.com இல் உருவாக்க முடியும். அந்த blog ஐ அழகான முறையில் வடிவமைப்பு செய்யவேண்டும் அதேநேரம் SEO யினை சிறந்த முறையில் செய்யவேண்டும் மேலும் உங்கள் blog ஐ சிறந்த முறையில் சந்தைப்படுத்தி அதிகமான பவனையாளர்களை கவர வேண்டும். அதன் பிறகு Google adsense, affiliate marketing மற்றும் ஏனைய ads திட்டங்களான chitika, inforlinks, buysell ads ,etc போன்றவைகளின் மூலம் பணம் பார்க்க முடியும்.

2. Freelance Writing:  இணையத்தில் பணம் பார்கும் வழிமுறையளில் அடுத்த முக்கதியமான முறைதான் Freelance Writing. யாரெல்லாம் பத்திரிக்கையாளராக, பத்திரிக்கை ஆசிரியராக, பிரதிபண்ணி எழுதுபவராக, கட்டுரை எழுதுபவராக இருக்கின்றாறோ அவர்களுக்கு பொருத்தமானது. பாரிய புத்தக வெளியீட்டாளர்கள், பத்திரிக்கை நிறுவனங்கள் பிரபலமானவர்களிடம் எழுதக்கொடுத்து அதிகம் செலவு செய்வதை தவிர்ப்பதற்காக இவ்வாறான  Freelancer களை நாடிச்செல்கின்றுது. இவ்வாறான வேலைகளை இவ்விணையத்தளங்களி்ல் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும்
FreelancewritingGetfreelancerDigital Point forum
3. Programmers: உங்களுக்கு C++, Java, .NET, PHP போன்றவற்றில் சிறந்த அறிவு இருக்கின்றதா? வீட்டிலிருந்து கொண்டு வேலை செய்ய ஆசைப்படுகின்றீர்களா? அப்பெடியென்றால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை ஏனென்றால் உங்களுக்காக Getfreelancer ல் நிறையவே வேலை காத்துக்கொண்டு இருக்கின்றது.

இன்னும் நிறையவே வழிகள் இருக்கின்றது அவற்றை அடுத்து வரும் பிரசுரங்களில் பார்ப்போம்

இணையத்தில் உழைக்க வழி செய்யும் விளம்பர இணையத்தளங்கள் (Few Advertisement Programs for Bloggers)

வீட்டிலிருந்துகொண்டு இணையத்தில் உழைக்கலாமா? நம்மில் நிறையப்பேர் வழி தேடிக்கொண்டு இருக்காங்க அவங்களுக்கு உதவலாம் என்றுதான் இதை பிரசுரிக்கினறேன்.
இணையத்தில உழைக்க நிறைய வழிகள் இருக்கினறது அதில் ஒன்றுதான் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பதிப்பது. அதெப்படி விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது என நீங்கள் கேட்பது எனக்கு விளங்குகின்றது. அப்படிச் சம்பதிக்க முதல்ல உங்களிடம் ஒரு இணையத்தளம் வேண்டும். அதுவும் கணிசமான அளவு பயனாளர்கள் பார்க்கக்கூடியதானதாகவும் இருக்க வேண்டும் அவ்வாறான இணையத்தளங்களில் மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை விளம்பரம் செய்வதன் ஊடாக நாம பணம் சம்பாதிக்கலாம். இவ்வாறு விளம்பரங்களை வழங்குவதற்காவென்று பல நிறுவனங்கள் காணப்படுகினறன அவ்வாறன நிறுவனங்களில் எம்மையும் ஒரு விளம்பர பிரசுரராக இணைப்பதன் ஊடாக அவர்களிடமிருந்து விளம்பரங்களைப்பெற்று எமது இணையத்தில் பிரசுரிக்கலாம். அவ்வாறு விளம்பரங்களை வழங்கும் நிறுவனங்களாக

போன்றவற்றை குறிப்பிடலாம் ஆன இது மாத்திரம் இணையத்தில் உழைப்பதற்கான வழியல்ல இன்னும் அதிகமான இருக்கின்றது அவைகள அடுத்த Pots களில் பார்ப்போம்.

துருக்கியில் இயற்கையாக பாறையில் அமைந்த நீர்த்தடாகம் (Turkey Natural Rock Pools)

முற்றிலும் மாறுபட்ட வேற்றுக்கிரக நிலவமைப்பில் துருக்கியின் கிரேக்க உரோம புராதன நகரமாகிய கிராபொலிஸில் இயற்கையாகவே பாறையில் வடிவமைக்கப்பட்ட நீர்த்தடாகம் ஒன்று காணப்படுகின்றது.  ஒரு மலையில் படிக்கட்டு போல் இயற்கையாகவே வடிவமைக்கப்பட்டு காணப்படுகின்றது. இதிலிருந்து வரக்கூடிய நீர் மருத்துவக் குணமுடையதாக நூற்றண்டு காலமாக நம்பப்படுகின்றது.  UNESCO நிறுவனமானது உலக பாதுகாக்கப்பட்ட புராதன இடமாக பிரகடப்படுத்தியுள்ளதோடு அதன் பாதுகாப்பையும் பொறுப்பெடுத்துள்ளது.
துருக்கியில் உல்லாசப்பிரயாணிகளை அதிகம் கவரக் கூடிய ஒரு இடமாகவும் இது விளங்குகின்றது. கட்டணம் செலுத்தி விட்டு இதில் குளிக்கவிரும்புபவர்கள் நீராடலாம். எவ்வித நவீனமாக்கலுக்கும் உட்படுத்தப்படாது இயற்கையான தன்மையிலையே இன்றும் பேணப்படுவது இதன் முக்கியமான சிறப்பியல்பாகும்.

தேர்ச்சி 7.6: மாறிகள் மற்றும் இயக்கிகள் (Python Variable and Operators)

Tuple
இது ( ) இனுள் , வினால் பிரிக்கப்பட்ட பெறுமானங்களை கொண்டிருக்கும். இவ்பெறுமானங்கள் அல்லது தரவுகள் வித்தியாசமான தரவு வகைகளையும் கொண்டிருக்கும்.

>> mytuple = (‘a’, ‘b’, ‘c’, 1, 10, 20)
>> mytuple2 = “a”, “b”, “c”, 10, 20

>> type (mytuple)
>> type (mytuple2)

Ø  Tuple பெறுமானங்களை அணுகுவதற்கு

>> print “my tuple value : ”, mytuple [0]
       >> print (mytuple [3])

Ø  Tuple அழிப்பதற்கு

>> del mytuple

Ø  எந்த பெறுமானமும் அற்ற Tuple உருவாக்க

>> empty_tuple=()
>> print (empty_tuple)

Ø  Tuple  துண்டாக்கல்

>> print (mytuple [0:2])
>> print (mytuple [0: -2])

Ø  +, *  செய்கைகள்;

>> tup1 = (1, 2, 3)
>> tup2  = (4, 5, 6)
>> tup3 = (7, 8, 9)

>> tup123 = tup1+tup2+tup3
>> print tup123
>> print (tup1 * 4)
>> len (tup1)

Ø  Tuple functions

>>cmp (tup1, tup2)      # இரண்டு Tuple பெறுமதிகளை ஒப்பீடு செய்வதற்கு

>> len (tup1)                # tuple நீளத்தை அறிவதற்கு

>> max (tup1)              # tuple ல் உள்ள ஆக்க கூடிய பெறுமதியை வெளியீடு செய்வதற்கு
>> tuple (list1)             # ஒரு list Tuple ஆக மாற்றுவதற்கு

List

சதுர அடைப்புக்குறியினுள் [ ]  வினால் பிரிக்கப்பட்டு பல்வேறு வகையான தரவுகளை கொண்டிருக்கக் கூடிய ஒரு மாறியாகும்.
>> my_list = [5, 12, 15, 16]
>> print (my_list)
>> my_list = [5, 2.5, ‘ahamed’]
>> print (my_list)

Ø  Empty list

>> my_list = [ ]
>> print (my_list)

Ø  List சுட்டிகள்;

>> list1 = [‘a’, ‘b’, ‘c’ ,‘d’]
>> print (list1[3])
>> print (list[0], list[3])
Ø  List துண்டாக்கல்
>> print (list1[0:2])
>> print (list1[0:-2])
>> print (list1[:3])
>> print (list1[:])

Ø   List பெறுமானத்தை பதிலீடு செய்தல்;

>> list2 = [2, 3, 4, 5, 6]
>> list2[3] = ‘X’
>> print (list2)

Ø  +, * செய்கைகள்;

>> list_a = [“a”, “b”, “c”, “d”]
>> list_b = [1, 2, 3, 4, 5]

>> lista_b = list_a+list_b
>> print (listab)

>> print (list_a*3)
>> print (list_a[3]*4)

Ø  List functions

>> list_b.insert(2,-1)                # list இனுள் உட்செருகுதல்;
>> list_b.append(34)             # List இன் இறுதியில் பெறுமானத்தை செறுகுதல்;
>> list_b.index(34)                   # List ல் பெறுமதி 34இன் இடம்;
>> print (list_b.count(2))         # list_b யில் உள்ள 2 க்களின் எண்ணிக்கை
>> list_b.remove(34)                # list பெறுமதி 34 list இலிருந்து நீக்குதல;
>> list_b.reverse()            # list பெறுமதிகளை பின்னாலில் உள்ள வரிசைப்படி ஒழுங்கு செய்தல்;
>> list_b.sort()                         # list ஏறுவரிசையிலிருந்து எழுதுதல்;
            >> list_b.pop()                         # List இன் பெறுமதியை கடைசியிலிருந்து நீக்கும்   >> list_b.pop(0)                            # list இன் பெறுமதியை முதலில் இருந்து நீக்கும்

Dictionary

Dictionary ஆனது சொற்கள் or சாவிகளையும் அதற்கான பெறுமதிகளையும் கொண்டு காணப்படுகின்ற ஒன்றாகும். இது {} இனுள் தரவுகளை கொண்டு காணப்படும்.
>> myDict={}

>> myDict[‘first’] = 1              # ‘first’ ஆனது சாவியாகும். 1 ஆனது அதன் பெறுமதியாகும்.
>> myDict[‘second’] = 2         
>> myDict[‘third’] = 3

>> print (myDict)

>> myDict2 = {’12Acom’ = “Ahamed”, ’12Aarts ’ = “Sifak”, ‘12Bio’ = “Sahan”}
Ø  குறித்த ஒரு சாவியை அழைப்பதற்கு

>> print myDict2[‘12Acom’]
Ø  ஒரு பெறுமதியை மாற்ற

>> myDict2[‘12Acom’ = “sameer”]
>> print myDict2[‘12Acom’]
Ø  எல்லா சாவிகளையும் அழைப்பதற்கு

>> myDict.keys()

Ø  எல்லா பெறுமதிகளையும் அழைப்பதற்கு

>> myDict2.values()      

இயக்கிகள்; (Operators)

பின்வரும் இயக்கிகள் Python நிரலியில் பயன்படுத்தப்படுகின்றன
ü  எண் கணித இயக்கிகள் (Arithmetic Operators)
ü  சார்ந்த இயக்கிகள்; (Comparison Operators)
ü  தர்க்க இயக்கிகள்; (Logical Operators)
ü  Bitwise இயக்கிகள்; (Bitwise operators)
ü  Assignment இயக்கிகள்; (Assignment Operators)

எண் கணித இயக்கிகள்; (Arithmetic Operators)
                  
a=10, b=20

இயக்கி
விபரம்
உதாரணம்;
+
கூட்டல்
a + b # 30
-
கழித்தல்
a - b # -10
*
பெருக்கல்
a * b # 200
/
பிரித்தல்
b / a # 2
%
Modulus - பிரிக்ப்பட்டதில் தடவைகள் போக மீதியை மாத்திரம் வெளியீடாகத் தரும்;
b % a # 0
**
அடுக்கு
a**b # 10^ 20
//
Floor Division (ஈவு) - தசமங்கள் தவிர்த்து விளைவினைத் தரும்
9//2 = 4 and 9.0//2.0 = 4.0

சார்ந்த இயக்கிகள்; (Comparison Operators)

a = 10, b = 20

இயக்கி
விபரம்
உதாரணம்;
==
இரண்டு பெறுமானங்கள் ஒப்பிடப்பட்டு சமனாக இருந்தால் True எனவும் இல்லாவிட்டால் False எனவும் வெளியீடு செய்யும்;
(a == b) # false
!=
பரிசீலிக்கப்படும் இரண்டு பெறுமானங்களும் சமனற்றதாகவிருந்தால் True என வெளியீடு செய்யும் அல்லது False
(a != b) # true
<> 
பரிசீலிக்கப்படும் இரண்டு பெறுமானங்களும் சமனற்றதாகவிருந்தால் True என வெளியீடு செய்யும் அல்லது False. இது != போல் செயற்படும்
(a <> b) # true
> 
இடப்பக்க பெறுமதி வலப்பக்கத்தை விட அதிகமாக இருந்தால் வெளியீடு True ஆகும் அல்லது False
(a > b) # false
< 
இடப்பக்க பெறுமதி வலப்பக்கத்தை விட குறைவாக இருந்தால் வெளியீடு True ஆகும் அல்லது False
(a < b) # true
>=
இடப்பக்க பெறுமதி வலப்பக்கத்தை விட அதிகமாக அல்லது சமனாக இருந்தால் வெளியீடு True ஆகும் அல்லது false
(a >= b) # false
<=
இடப்பக்க பெறுமதி வலப்பக்கத்தை விட குறைவாக அல்லது சமனாக இருந்தால் வெளியீடு true ஆகும் அல்லது false
(a <= b) # true.

தர்க்க இயக்கிகள்; (Logical Operators)

a=10, b=20, x=25, y=15

இயக்கி
விபரம்
உதாரணம்;
And
இரண்டு பெறுமானங்கள் உண்மையாக இருந்தால் விளைவு True அல்லது False
(a>b) and (x>y) # false
Or
இரண்டில் ஏதாவது பெறுமானம் உண்மையாக இருந்தால் விளைவு true அல்லது false
(a>b) and (x>y) # true
Not
ஏதாவது condition true ஆக இருந்தால் இவ் இயக்கி false ஆக்கும்
Not (a > b) # true.

Bitwise இயக்கிகள்; (Bitwise operators)

a = 0011 1100
b = 0000 1101
-----------------
a&b = 0000 1100, a|b = 0011 1101, a^b = 0011 0001, ~a  = 1100 0011
இயக்கி
விபரம்
உதாரணம்;
&
Binary AND இயக்கி
(a & b) # 12 (0000 1100)
|
Binary OR  இயக்கி
(a | b) # 61  (0011 1101)
^
Binary XOR இயக்கிp
(a ^ b) # 49 (0011 0001)
~
Binary Ones Complement Operator இயக்கி. தரப்பமட்ட மாறியை 2's complement க்கு மாற்றும்
(~a ) # -61 (1100 0011);
<< 
Binary Left Shift இயக்கி. இவ் இயக்கியின் இடப்பக்கத்தில் குறிக்கப்பட்ட அளவு தரப்பட்ட இலக்கத்தின் இடப்பக்கம் அவ் இலக்கத்தின் Binary பெறுமதியை நகர்த்தும்;
a << 2 # 240 (1111 0000)
>> 
Binary Right Shift இயக்கி. இவ் இயக்கியின் இடப்பக்கத்தில் குறிக்கப்பட்ட அளவு தரப்பட்ட இலக்கத்தின் வலப்பக்கம் அவ் இலக்கத்தின் Binary பெறுமதியை நகர்த்தும்
a >> 2 # 15 (0000 1111)

Assignment   இயக்கிகள்
இயக்கி
உதாரணம்
=
c = a + b
+=
c += a         # c = c + a
-=
c -= a          # c = c - a
*=
c *= a         # c = c * a
/=
c /= a         # c = c / a
%=
c %= a       # c = c % a
**=
c **= a       # c = c ** a
//=
  c //= a       # c = c // a

இயக்கிகளின் முன்னுரிமை அடிப்படையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்ட்டுள்ளது
இயக்கிகள்
**
~ + -
* / % //
+ -
>> <<
&
^ |
<= < > >=
<> == !=
= %= /= //= -= += *= **=
is is not
in not in
not or and